03.07.2024 இன்று மாலை முள்ளியவளை, மாமூலை – நெடுங்கேணி வீதியில் மாமூலை மயானத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கயட்டை – மாமூலை முள்ளியவளையை சேர்ந்த 09 வயதுடைய வரதராஜா டிக்சலா என்பவர் உயிரிழந்தவராவார்.
முள்ளியவளையில் இருந்து நெடுங்கேணி நோக்கி பயனித்த பட்டா வாகனத்தில் மோதுண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
குறித்த பகுதியில் முந்திரிகை செய்கை காணப்படுகின்றது, அந்த முந்திரிகை செய்கையில் இருந்து வீதிக்கு வெளியே வரும்போதே குறித்த சிறுமியை வீதியால் வேகமாக வந்த வாகனம் மோதியுள்ளது. சிறுமியின் கவனமின்மையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பட்டா வாகனத்தை செலுத்தி வந்த தம்பலகாமம், திருகோணமலை சேர்ந்த 18 வயது லொறியின் சாரதி, லொறியுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.