யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் புதிய பரிணாமத்துடன் நேற்று (04) முதல் மீண்டும் முன்னெடுக்கப்படுகின்றது நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பொலீசாரும் இராணுவத்தினரும் இணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இந்த நடவடிக்கை 04.07.2024 அன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு (Mullaitivu) – புதுக்குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பில் பல குற்றங்களுடன் தொடர்புபட்ட 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 43 லீ்ட்டர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு 9ஆம்,10ஆம் வட்டார பகுதிகளில் பொலிஸார் இராணுவத்துடன் இணைந்து (04.07.2024) காலை 5.00 மணி தொடக்கம் ஆறு மணி வரை விசேட சுற்றிவளைப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.
இதன்போது திறந்த பிடியாணை நபர்கள் இருவர், பொலிஸாரினால் ஒருநாள் பிணையில் விடுவிக்கப்பட்ட 3 நபர்கள் மற்றும் திருகோணமலையை சேர்ந்த பல குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவருமாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
அதேவேளை இந்த நடவடிக்கையின் போது சுமார் 43 லீட்டர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் கைது செய்த சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.