பதுளை – சொரணாதோட்டை வீதியின் வெலிஹிந்த பிரதேசத்தில் இன்று (05) மதியம் 12 மணியளவில் லொறியொன்று வீதியின் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மொனராகலையில் இருந்து வீதிகளில் பேருந்து தரிப்பிடங்களை அமைப்பதற்காக வந்தவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.