பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கபோகும் முதலாவது இலங்கை தமிழ் பெண்.. குவியும் வாழ்த்துக்கள்

0
143

பிரித்தானிய வரலாற்றில் முதல் தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையையும் தனதாக்கிகொண்டுள்ளார்.

பிரித்தானிய பொதுத் தேர்தலில், தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழ்ப் பெண்ணான உமா குமரன் வெற்றிபெற்றுள்ளார்.

இவர் லண்டன் ஸ்டராட்ஃபோர்டு தொகுதியில் 19,145 வாக்குகளை பெற்று பெரும் வெற்றியடைந்துள்ள நிலையில் பிரித்தானிய வரலாற்றில் முதல் தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையையும் தனதாக்கிகொண்டுள்ளார்.

உமா குமரன் ஈழத்து தமிழ்ப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபை மூலம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நீதியை நிலைநாட்டமுடியும் என உமாகுமரன்தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்திருந்தார்.

உலக அரங்கில் நீதிக்கான எங்கள் வேண்டுகோள்களை நாம் வலுப்படுத்தவேண்டும்- பேரழிவையும் உயிரிழப்பையும் நிலத்தை இழந்ததையும் நாங்கள் மறக்கமாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

உமா குமரனை எதிர்த்து போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான கேன் பிளாக்வெல், 3,144 வாக்குகள் மட்டுமே பெற்று நான்காவது இடத்தில் உள்ளார்.

2024 பிரிட்டன் பொதுத் தேர்தலில் அந்நாட்டு தொழிலாளர் கட்சி வெற்றிப் பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்நாட்டின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பதவியேற்கவுள்ளார்.

2024 பிரிட்டன் பொதுத் தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான 326 இடங்களை தொழிலாளர் கட்சி கைப்பற்றிள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் தொழிலாளர் கட்சி 386 இடங்களிலும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி 94 இடங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தோ்தலில் எதிா்க்கட்சித் தலைவா் கியொ் ஸ்டாா்மா் தலைமையிலான தொழிலாளா் கட்சி, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரதமா் ரிஷி சுனக் தலைமையிலான கன்சா்வேட்டிவ் கட்சியை தோற்கடித்து மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here