யாழ் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன் பதற்றம் – வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக குவியும் மக்கள்.!

0
78

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னேற்றத்தை வலியுறுத்தியும், வைத்திய பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடாத்தப்படுகின்றது.

அத்துடன் கடையடைப்பு கண்டன போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ் சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரை பதவி நீக்கம் செய்து, கைது செய்ய முயற்சிப்பதாக நேற்றிரவு வெளியான தகவலை அடுத்து, பொதுமக்கள் வைத்தியசாலை வளாகத்தில் கூடிய நிலையில் நேற்று நள்ளிரவு அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

இந்த நிலையில் அதிகாலை முதல் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் போராட்டக்காரர்கள் ஏ 9 வீதியை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அவ்விடத்தில் பதற்ற நிலை தொடர்வதாக தெரியவருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here