ஏறாவூர் பகுதியில் 14 வயது மாணவி து.ஷ்.பி.ர.யோ.க.ம் – இளைஞனும் தாயும் கைது.!

0
179

ஏறாவூர் பிரதேசத்தில் 14 வயது மாணவியைக் காதலித்த 22 இளைஞன் அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியுள்ள சம்பவம் தொடர்பில் குறித்த இளைஞனும் அவரது தாயாரும் புதன்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தையார் இல்லாத நிலையில் தாயார் மத்திய கிழக்கு நாடொன்றில் பணிபுரிந்து வருவதுடன் மாணவி உறவினருடன் தங்கி அப்பகுதியிலுள்ள பாடசாலையில் கல்வி கற்று வந்துள்ளார். இந்த நிலையில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் குறித்த மாணவியை இளைஞன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்குத் தங்க வைத்து பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி வந்துள்ளார். இது தொடர்பாகப் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை அதிகாரிக்குத் தகவல் கிடைத்துள்ளது.

சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியுள்ள குற்றச்சாட்டில் இளைஞனையும் அதற்கு உடந்தையாக இருந்த இளைஞனின் தாயையும் புதன்கிழமை (10) அன்று கைது செய்ததுடன் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here