சகோதரியின் வீட்டில் தேங்காய் உரித்துக்கொண்டிருந்த சகோதரனுக்கு நேர்ந்த பயங்கரம்.!

0
120

காலியில் ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரப்பனாதெனிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

ரத்கம, ரப்பனாதெனிய பகுதியில் வசிக்கும் 60 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டவர் தேங்காய் வியாபாரி ஒருவர் என்பதுடன் சம்பவத்தின் போது இவர் வெளிநாட்டில் உள்ள தனது இளைய சகோதரியின் பூட்பட்ட வீட்டிற்குச் சென்று தேங்காய் உரித்துக்கொண்டிருக்கும் போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்டவரது சடலம் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here