ஜனாதிபதி புலமைபரிசில் திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 922 மாணவர்கள் தெரிவு.!

0
115

ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் 2024 ஆம் ஆண்டுக்குரிய புலமைபரிசில் திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு வலையங்களிலும் 922 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.

இந்த மாணவர்களுக்கான புலமைபரிசில் திட்டம் வழங்கும் நிகழ்வும் எதிர்வரும் 18.07.2024 அன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி கலையரங்கில் நடைபெறவுள்ளது.

முல்லை வலயத்தில் 472 மாணவர்களும் துணுக்காய் வலயத்தில் 450 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

க.பொ.த உயர் தர மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.6000/- வீதம், 24 மாதங்களுக்கு வழங்கப்படவிருப்பதோடு க.பொ.த உயர் தர மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.6000/- வீதம், 24 மாதங்களுக்கு வழங்கப்படவிருப்பதோடு முதலாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள நாட்டின் 10,126 பாடசாலைகளையும் உள்ளடக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான 12 மாதங்களுக்கு மாதாந்தம் ரூ.3000/-வீதம் உதவித் தொகை வழங்கப்படும். புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்காத பாடசாலைகள் தொடர்பான பட்டியில் சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் தொடர்பான மேலதிக தகவல்களை அந்தந்த மாவட்ட செயலகங்களில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் மாத்திரம் ஜனாதிபதி நிதிய அதிகாரிகளை 0112354354 – தொடர் இலக்கம் 4835 மற்றும் 0740854527 (Whatsapp மட்டும்) மூலம் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here