யாழில் தனது குழந்தையையும் கணவனையும் கைவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி..!

0
135

தனது இரண்டரை வயது குழந்தையை கைவிட்டு, கள்ள காதலனுடன் ஊரை விட்டு வெளியேறிய பெண்ணையும், காதலனையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கணவன் மற்றும் தனது குழந்தையுடன் வசித்து வந்த குடும்ப பெண்ணொருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது காதலுடன் ஊரை விட்டு சென்று இருந்தார்.

இது தொடர்பில் கணவனால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பெண்ணையும், அவரது காதலனான இளைஞனையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து, நீதிமன்ற விசாரணைகளை அடுத்து இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here