நீண்ட நாட்களின் பின்னர் சரிகம மேடையில் ஈழக்குயில் கில்மிஷா.. இதோ வீடியோ..!

0
84

இலங்கையில் இருந்து சென்ற பாடகர்களான கில்மிஷா – விஜயலோஷன் மற்றும் இந்திரஜித் ஆகியோர் சரிகமப மேடையில் சங்கமம் சுற்றில் இணைந்திருந்தனர்.

தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி நடுவர்களின் பாராட்டுகளை பெற்றனர். விஜயலோஷனின் பாடல் சனிக்கிழமை ஒளிபரப்பான நிலையில் கில்மிஷாவின் பாடல் ஞாயிற்று கிழமை ஒளிபரப்பானது.

மற்றும் நிகழ்ச்சியின் நீளம் கருதி இந்திரஜித்தின் பாடல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட வில்லை. இந்நிலையில் சங்கமம் சுற்றில் கில்மிஷாவுடன் இணைந்து கார்த்திக் பாடிய பாடல் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகின்றது.

மேலும், கில்மிஷாவுடன் கார்த்திக் பாடி முடித்த பிறகு தான் வாழ்க்கையில் திசை மாறிய நெகிழ்ச்சியான தருணம் குறித்து பேசினார். கில்மிஷாவுடன் ரீல் போட்ட பிறகு தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. மீண்டும் அவருடன் பாடுவது மகிழ்ச்சியாக உள்ளது என்று நெகிழ்ச்சியுடன் கார்த்தி பேசினார். இதனையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here