பாணந்துறையில் ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை – எலுவில பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதான கவிது ஹசரேல் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேர்முகப் பரீட்சை ஒன்றில் கலந்து கொள்வதாக தந்தையுடன் சென்ற போதே விபத்து ஏற்பட்டுள்ளது. பாணந்துறையிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற ரயிலில் மோதியே இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பாணந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.