முல்லைத்தீவில் நபரொருவரிடம் 35 லட்சம் கொள்ளை.. பொது மக்களே அவதானம்..!

0
182

இலங்கையின் வடக்கில் தமிழர் வாழ் பகுதிகளை இலக்கு வைத்து வங்கி மோசடிகள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. இத்தகவலை உங்கள் சொந்தங்கள், நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துக்கள். ஏமாளிகள் ஆகாதீர்கள்.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இவ்வாறான மோசடிகள் அதிகளவு பதிவாகியுள்ளன, இதனால் பெரும் தொகை பணத்தினை மக்கள் இழந்துள்ளார்கள், இந்த விடையம் தொடர்பாக மக்கள் அவதானமாக செயற்படவேண்டும் என நாட்டில் உள்ள வங்கிகள் ஊடகங்கள் ஊடாக அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் வங்கி மோசடிகள் அதிகமாக பதிவாகியுள்ளமை பாதிக்கப்பட்ட தரப்பினர் ஊடாக அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் நபரொருவரிடம் சுமார் 35 லச்சம் வரை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக உறுதி படுத்தமுடியாத தகவல்கள் கூறுகின்றன.

குறித்த நபரை போன் மூலம் தொடர்பு கொண்ட நபர்கள், வாங்கி இலக்கத்தை பெற்றுக்கொண்டு, பின்னர் போன் நம்பர்க்கு வரும் OTP இலக்கத்தை சூட்சுவமான முறையில் கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். அதன் பின்னர் வங்கியிலுள்ள பணம் மாயமாகிறது. பாதிக்கப்பட்டவர் குழறுகிறார், எனவே பொதுமக்களே ஏமாளிகளாக இருக்காதீர்கள், தயவு செய்து உங்களுக்கு வரும் OTP இலக்கத்தை யாருக்கும் தெரியப்படுத்தாதீர்கள்.

நாட்டில் உள்ள மக்களுக்கு விழிப்பினை கொடுக்கும் வகையில் அரச வங்களிகள் தனியார் வங்கிகள் தொலைக்காட்சிகள், வானொலிகள், பத்திரிகை ஊடாக இது தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தி வந்தாலும் அது கிராமங்களில் உள்ள மக்களை சரியான முறையில் சென்றடையவில்லை.

இலத்திரனியல் நீரோட்டத்திற்கு ஏற்றவகையில் மக்களின் இயந்திர வாழ்க்கை மற்றும் நவீன இலத்திரனியல் தொடர்பாடல் வசதிகள் என்பனை ஏற்படுத்தியும் அதில் சாரியான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு இல்லாத மக்களே இவ்வாறு பாதிக்கப்படுகின்றார்கள்.

யார் என்றே தெரியாத ஒரு தொலைபேசி அழைப்பில் ஏமாந்து உங்கள் வங்கி கணக்கு இலக்கம் அடையாள அட்டை இலக்கங்களை கொடுத்துவிட்டு பின்னர் அவர்கள் உங்கள் தொலைபேசிக்கு வந்துள்ள குறுந்தகவலையும் கேட்டு வாக்கிவிட்டு உங்கள் வங்கி கணக்குகளில் உள்ள பணங்களை அவர்கள் திருடிவிட்ட பின்னர் நீங்கள் வங்கிகளை நாடி எந்த பயனும் இல்லை, இவ்வாறான சம்பவங்கள் பாமர மக்களை இலக்கு வைத்து குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் வறிய மக்களை இலக்காக கொண்டு நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இது ஒரு இலத்திரனியல் மோசடி இவற்றை கண்டுபிடித்ததாகவோ அல்லது இவ்வாறான கும்பலை கைது செய்ததாகவோ மக்கள் அறியவில்லை. ஆனால் தற்போது பாமர மக்கள் மத்தியிலும் நவீன கையடக்க தொலைபேசிகள் காணப்படுகின்றன அனதால் அவர்கள் அடையும் நன்மைதான் என்ன?

இன்று பெரும்பாலான மக்கள் ரிக்டொக், facebook போன்ற சமூக ஊடக செயலிகளில் தங்கள் பேழுதுபோக்கினை கழிக்கும் மக்களாகவே காணப்படுகின்றார்கள், தங்களை அழகு பார்ப்பதும், மற்றவர்களை பற்றி அறிந்து கொள்வதும், அடுத்தவன் வீட்டுக்குள் என்ன நடக்குது என்பதை தெரிந்து கொள்வதும் தான் இன்று அதிகமாக காணப்படுகின்றது

இவ்வாறான சமூக வலைத்தளங்களை சரியாக ஒரு மனிதனின் வளர்ச்சிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் பயன்படுத்தும் சமூகம் என்பது குறைவாகவே காணப்படுகின்றது.

நாட்டில் வாழும் மக்களின் பாதுகாப்பிற்காக ஒரு அறிவித்தலை அரசாங்கம் அறிக்கின்றது, என்றால் அதனை பார்த்து வாசித்து அறிந்துகொள்பவர்கள் மிகவும் குறைவாகவே இலங்கையில் காணப்படுகின்றார்கள், இதனை விட நாளாந்தம் பத்திரிகை, மற்றும் செய்திகளை வாசித்து நாட்டு நடப்பினை அறிந்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.

பொழுதுபோக்கு மற்றும் புதினமானவற்றை விரும்பி பார்க்கும் மக்கள் மத்தியில் இவ்வாறன அறிவித்தல்கள் எவ்வாறு சென்றடையும் என்பது பாரிய கேள்வியாக இருக்கின்றது. இந்த நிலையில் இவ்வாறனவர்களும் இந்த வங்கி மோசடி காரர்களின் பிடியில் சிக்குப்பட்டு தவிக்கின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறு பல இடங்களில் வங்கி மோசடிக்காரர்களின் பிடியில் சிக்குப்பட்டு பல பெருமளவன பணத்தினை இன்றும் இழந்து வருபவர்கள் வங்களில் முறைப்பாட்டினை தெரிவித்து வருகின்றார்கள்.

இந்த விடையம் சரியான வகையில் மக்களை சென்றடை வேண்டுமாக இருந்தால் ஒவ்வொரு பிரதேசங்களிலும் அந்த பிரதேசத்தின் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் சமூக ஊடகங்களை வங்கிகள் நாடவேண்டும்.

அவ்வாறு சமூக ஊடகங்கள் ஊடாக மக்களுக்கான வழிப்புணர்வினை ஊட்டும் செயற்பாட்டில் நாட்டில் உள்ள வங்கிகள் மற்றும் வங்கி கிழைகள் மேற்கொள்ளவேண்டும் அது பாமர மக்கள் வரை சென்றடைய வழி வகுக்கும் என்பது தான் உண்மை..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here