வெளிநாட்டில் பிள்ளைகள்.. யாழில் உயிரிழந்து கிடந்த தந்தை.!

0
126

தனியாக வீட்டில் வசித்து வந்த ஓய்வு நிலை அதிபர் ஒருவர் புதன்கிழமை (31) அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மயிலங்காடு வீதி புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த வேலாயுதர் பாலசுப்பிரமணியம் (வயது 68) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

குறித்த நபர் மனைவியை பிரிந்து கடந்த 10 ஆண்டுகள் தனியாக வசித்து வந்துள்ளார். அவரது பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். குறித்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்து விட்டு வீட்டை விட்டு சென்றவர்கள் தமது பொருட்களை எடுப்பதற்கு வீட்டுக்கு வந்தவேளை குறித்த நபர் நிர்வாண நிலையில் வீட்டினுள் சடலமாக காணப்பட்டார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜேயபாலசிங்கம் மேற்கொண்டார். சடலமானது மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here