யாழ் விபத்தில் படுகாயமடைந்த அரச உத்தியோகத்தர் உயிரிழப்பு.!

0
173

யாழ் பருத்தித்துறையில் கடந்த மாதம் இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த வடமராட்சி கல்வி வலய ஊழியர் சிகிச்சை பலனின்றி இன்று (01) அதிகாலை உயிரிழந்தார்.

பருத்தித்துறை புற்றளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய வடமராட்சி கல்வி வலய ஊழியரான யோகலிங்கம் அருள்காந்தன் (வயது-33) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.

இவரின் திடீர் இழப்பு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உயிரிழந்தவரின் சகோதரன் கூறும்போது…

”எனது தம்பியின் மரணத்துக்கு யாழ்ப்பாண வைத்தியசாலை வைத்தியர்களின் அசமந்த போக்கு தான் மூல காரணம். தகுந்த சட்ட நடவடிக்கை எடுப்பேன். நிர்வாகம் பதில் கூறியே ஆக வேண்டும்” என தனது முகநூலில் கூறி இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here