இலஞ்சம் வாங்கிய அமைச்சர் வியாழேந்திரனின் செயலாளர் கைது.!

0
148

வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் செயலாளர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் நேற்று மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆற்று மணல் அகழ்வுக்கான உரிமத்தினை பெற்றுக் கொள்வதற்காக சிங்களவர் ஒருவரிடமிருந்து 15 இலட்சம் ரூபா பணம் அவர்களுக்கு இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவரையும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here