திருகோணமலையில் 14 வயது மாணவி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழப்பு.!

0
97

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகர் பகுதியில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் வியாழக்கிழமை (01) தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தரம் 10 இல் கல்வி பயின்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.

மாணவியின் சடலம் நேற்றைய தினம் திருகோணமலை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டுசெல்லப்பட்டிருந்த நிலையில், சட்ட வைத்திய அதிகாரி வெளிநாடு சென்றுள்ளதன் காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டுசெல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாணவி துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என்றும் பலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். சிறுமியின் தந்தை 2013ஆம் ஆண்டு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளமையும் பொலிஸ் விசாரணையின்போது தெரியவருகிறது.

மாணவியின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈச்சிலம்பற்று பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here