விபத்தில் மகள் காயம்; லொறியை துரத்திச் சென்ற தந்தை உயிரிழப்பு..!

0
92

பலாங்கொடை – அம்பெவில பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் வியாழக்கிழமை (02) பிற்பகல் தனது மனைவியையும் மகளையும் மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பலாங்கொடை வைத்தியசாலையில் மகளுக்கு தடுப்பூசி போட்டுவிட்டு வீடு திரும்பும் வழியில் உள்ள பஸ் தரிப்பிடமொன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடையொன்றிற்கு சென்றுள்ளார்.

மோட்டார் சைக்கிளை நிறுத்திய இடத்தில் மனைவியையும் மகளையும் நிக்குமாறு கூறிவிட்டு சென்றுள்ளார்.

இதன்போது, எதிர்ப்பாராத விதமாக எதிர் திசையில் இருந்து வந்த லொறி ஒன்று நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளையும் மகளையும் இடித்து சென்றுளளது. அதனை அவதானித்த தந்தை சத்தமிட்டுக்கொண்டு லொறியினை நிறுத்த முயற்சி செய்துள்ளார். லொறியை லொறி சாரதி நிறுத்தாமல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

விபத்துக்குள்ளான மகளை அவ்விடத்தில் மனைவியுடன் நிறுத்தி விட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தந்தையார் லொறியினை துரத்தி சென்றுள்ளார். லொறி சாரதி பலாங்கொடை கல்தொட்ட பிரதான வீதியில் அதிக வேகத்தில் செல்வதை கண்ட காயமடைந்த மகளின் தந்தையார் லொறியை துரத்திச் சென்று லொறியில் ஏறி அதனை நிறுத்த முயற்சி செய்துள்ளார்.

அப்போது குறித்த லொறி சாரதி அவரை இறக்கிவிட முயற்சி செய்ய முற்பட்ட வேளை, தந்தையார் விபத்திற்குள்ளாகிய சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பலாங்கொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சமித் ஜயகோடியின் கட்டளைக்கு அமைய போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி அடங்கிய குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

பலாங்கொடை நீதிமன்ற நீதிவான் பாக்யா விக்ரமசிங்க சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், பலாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு சென்று சடலத்தை பார்வையிட்ட பின்னர் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் மூலம் பிரதே பரிசோதனையை மேற்கொண்டு நீதிமன்றத்தில் சம்பவம் தொடர்பிலான ஆதாரங்களை முன்வைக்குமாறு தெரிவித்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த ஏழு வயதுடைய மகள் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரான லொறிச் சாரதியை தேடும் பணியில் பலாங்கொடை பொலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here