புதிதாக வாங்கிய சுசூகி வேகன்ஆர் காரை தீ வைத்து எரித்த கும்பல்.!

0
179

வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வேகன்ஆர் ரக காரை சிலர் தீ வைத்து எரித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று (10) இரவு பெலியத்த, குடாஹில்ல ஜயமாவத்தை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

அந்த வீட்டின் உரிமையாளர் சில நாட்களுக்கு முன்பு இந்த காரை வாங்கியுள்ளார்.

தீ விபத்தில் கார் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் வீட்டின் ஒரு பகுதியும் எரிந்துள்ளதாக தெரிவித்தார்.

தீயினால் ஏற்பட்ட இழப்பு இதுவரை கணக்கிடப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெலியத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.