மட்டக்களப்பு, வாகரை பிரதான வீதியிலுள்ள பனிச்சங்கேணி பாலத்தில் வீதியைக் குறுக்கே கடந்த சிறுவன் மீது வான் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்தப் பரிதாப சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது என்று வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி பகுதிக்கு தாயுடன் ஆட்டோவில் சென்ற சிறுவன் ஒருவனே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஆட்டோ வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது சிறுவன் வீதியை குறுக்கறுக்கும் போது அவ் வீதியால் வந்த வேனில் சிறுவன் மோதுன்டு சம்பவ இடத்திலே மரணமடைந்துள்ளார்.
வாழைச்சேனை, மீராவோடையைச் சேர்ந்த 8 வயதுடைய சப்பிறா மாஹீர் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரைப் போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.