திருகோணமலையில் இளம் குடும்பஸ்தர் விபரீத முடிவால் உயிரிழப்பு.!

0
56

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிச்சேனை பகுதியில் 20வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் அண்மையில் திருமணமான வெருகல் – மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த 20 வயதான ஒருவரே இவ்வாறு வீட்டில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

உயிரிழப்புக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here