பாடசாலை மாணவி து.ஷ்.பி.ர.யோ.க.ம் – வரலாறு பாட ஆசிரியர் கைது.!

0
145

13 வயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் அதே பாடசாலையில் கடமையாற்றும் வரலாறு பாட ஆசிரியர் ஒருவர் கடந்த 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது..

சந்தேக நபரான வரலாறு பாட ஆசிரியர் கடந்த மார்ச் மாதம் 09 ஆம் திகதி மாணவியை ஏமாற்றி மல்வத்தாவெல பிரதேசத்திற்குத் தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

இதன்போது சந்தேக நபரான வரலாறு பாட ஆசிரியர் இந்த மாணவியை காரினுள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். பின்னர் இது தொடர்பில் எவரிடமும் கூறக் கூடாது என சந்தேக நபரான வரலாறு பாட ஆசிரியர் இந்த மாணவியை அச்சுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், இந்த மாணவி நீண்ட நாட்களாகப் பாடசாலைக்கு வருகை தராமல் இருப்பதால் அதே பாடசாலையில் கடமையாற்றும் மற்றுமொரு ஆசிரியை ஒருவர் இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்த போது குறித்த சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து, இந்த ஆசிரியை இது தொடர்பில் வெல்லவாய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரான வரலாறு பாட ஆசிரியரைக் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி வைத்திய பரிசோதனைக்காக வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரை வெல்லவாய நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here