சென்னை – யாழ்ப்பாணம் இடையேயான புதிய விமான சேவை ஆரம்பம்..!

0
68

சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையேயான இண்டிகோ (Indigo) ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய விமான சேவை இன்று(01) ஆரம்பமாகியது.

இந்நிலையில், இன்று முதல் தினந்தோறும் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான விமான சேவை நடத்தப்படவுள்ளதாக இண்டிகோ (Indigo) ஏயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து பயணத்தை ஆரம்பித்த விமானமானது 52 பயணிகளுடன் இன்று பிற்பகல் 3.07 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இதன்போது இனியம் இசைக்க விருந்தினர்கள் மற்றும் இந்தியாவில் இருந்து வருகை தந்த பயணிகள் அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கு ஏற்றல், வரவேற்பு நடனம், நினைவுப் பரிசில்கள் வழங்கல், கேக் வெட்டுதல் மற்றும் விருந்தினர்களின் உரை என்பன இடம்பெற்றன.

இதனைத் தொடர்ந்து குறித்த விமானமானது சென்னை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது. யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் 74 பயணிகள் சென்னை நோக்கி பயணத்தை மேற்கொண்டனர்.

விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் யாழ்ப்பாண உற்பத்திகளான பனம் பானம் உள்ளிட்ட யாழ்ப்பாண உற்பத்திகள் வழங்கப்பட்டன.

அதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட்டதால் கொழும்பிற்கு செல்லாமல் மிகவும் இலகுவான முறையில் பயணத்தை மேற்கொள்ள கூடியவாறு உள்ளதாக பயணிகள் தெரிவித்தனர்.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பதில் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், யாழ்.இந்திய துணை தூதுவர் சாய் முரளி, விமானப்படை அதிகாரிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், பதவிநிலை அதிகாரிகள், பயணிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here