புத்தளம் பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் – நாகூர் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவனே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது…
உயிரிழந்த இளைஞன் பல்வேறு நபர்களிடமிருந்து கடனாகப் பணத்தைப் பெற்று வேலை வாய்ப்பு தேடி கத்தார் நாட்டிற்குச் சென்றுள்ள நிலையில் எந்த வேலை வாய்ப்பும் கிடைக்காததால் மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளார்.
இந்நிலையில் கடனாகப் பெற்ற பணத்தை மீளத் தர முடியாததால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த இந்த இளைஞன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.