5 வயது சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு.!

0
103

படபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹகங்கொட பகுதியில் சிறுவனொருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஹகங்கொட அளுத்வல பிரதேசத்தில் வசிக்கும் 5 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.

இறந்த சிறுவனின் தந்தை கடை நடத்தி வருவதுடன் கடையில் இருந்து சிறுவன் தனியாக வீட்டுக்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவன் விட்டிற்கு திரும்பி வராமையினால், வீட்டின் பின்புறமுள்ள விவசாய நிலத்திற்கு தயார்படுத்தப்பட்ட நீர் நிரம்பிய வடிகாலில் சிறுவன் மூழ்கி கிடப்பதைக்கண்ட தந்தை ஆராச்சிகந்த வைத்தியசாலைக்கு அனுமதிக்க கொண்டு சென்று போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here