பிபிலை – அம்பாறை வீதியின் நாகல பகுதியில் நேற்றிரவு (05) இடம்பெற்ற பேருந்து விபத்தியில் 49 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் மோதிக் கொண்டதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.