கல்முனையில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு.!

0
91

காட்டுயானை தாக்கியதில் ஒருவர் பரிதாபகரமாக பலியானார். பலியானவர் 70 வயதுடைய செல்லையா வேலாயுதம் என்பவராவார் .

இச்சம்பவம் இன்று (7) சனிக்கிழமை அதிகாலை கல்முனை மாநகரில் இடம் பெற்றுள்ளது. கல்முனை மாநகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு பின்னால் உள்ள வயல் வீதியில் இச் சம்பவம் இடம் பெற்றிருக்கிறது.

பஸ் நிலையத்தில் வழமையாக யாசகம் எடுக்கும் அவர் இன்று அதிகாலை அந்த வீதியால் செல்லும் பொழுது யானை தாக்குதலில் பலியாகி இருக்கிறார் .

இவர் சேனைக்குடியிருப்பை பிறப்பிடமாகவும் 4ம் கொலனியில் திருமணம் முடித்து பெரிய நீலாவணையில் வசிப்பவர் ஆவார் எனத் தெரிகிறது. இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் ஒரு மகன் இருக்கிறார்கள் .

கல்முனை போலீசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here