சுவிஸில் சடலமாக மீட்க்கப்பட்ட யாழ் இளைஞன்.. கதறும் உறவுகள்.!

0
29

சுவிஸ் நாட்டின் கிளாட்ப்ரூக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்களை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கோபிநாத் என்ற 34 வயதுடைய இலங்கையர் ஒருவரே நேற்று காலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் யாழ் பருத்தித்துறை பகுதியை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகின்றது.

திருகோணமலையை சொந்த இடமாக கொண்ட குறித்த இளைஞர் வடமராட்சி பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தை உள்ளது.

சுவிஸ் நாட்டை சேர்ந்த 40 மற்றும் 54 வயதான சந்தேகநபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த குடியிருப்பு Airbnb நிறுவனத்தால் வாடகைக்கு விடப்பட்டது என தெரியவந்துள்ளது.

அவசர சேவை மையத்திற்கு கிடைத்த அழைப்பின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், சம்பவ இடத்திலேயே இருவரையும் கைது செய்துள்ளனர்.

மூவருக்கு இடையிலான உறவு மற்றும் எதனால் கொல்லப்பட்டார் என்பது தொடர்பில் இன்னும் தெரியவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here