இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக பதவியேற்றதன் பின்னர் முன்னாள் அமைச்சரவையின் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களை கையளிக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.
முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் பயன்படுத்திய வாகனங்கள் மீள கையளிக்கப்பட்டுள்ளன.
புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவி இழப்பு மற்றும் அமைச்சுகளில் செயலாளர்கள் மாற்றமடைந்துள்ள நிலையில் இவ்வாறு வாகனங்களை மீள கையளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தககது.
அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த பணிப்புரைக்கமைய கையளிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரவையின் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மாயமான முன்னாள் அமைச்சரவையின் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.