கிளிநொச்சி – பளையில் இரு இளைஞர்கள் கைது..!

0
59

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணையிறவு பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 4 கிலோ கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த குறித்த இருவரையும் சோதனை செய்த போதே 4 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு, திருமுறிகண்டி பிரதேசத்தை சேர்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பழை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here