யாழில் கணவாய் பிடிக்க கடலுக்கு சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்.!

0
52

கணவாய் பிடிப்பதற்காக கடலுக்கு அடியில் வலைகளை கட்டுவதற்காக கடலுக்குச் சென்ற கடற்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – காக்கை தீவு பகுதியை சேர்ந்த 39 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

இவர் காக்கை தீவு பகுதியில் இருந்து தனது சக தொழிலாளிகள் ஐவருடன் கணவாய் பிடிப்பதற்கான வலைகளை கடலுக்கு அடியில் கட்டுவதற்காக கடலுக்குப் படகில் சென்றுள்ளார்.

படகில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். இந்நிலையில் உடனடியாக சக தொழிலாளிகள் படகை கரைக்கு திருப்பி, வைத்தியசாலைக்கு அவரை கொண்டுசென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

உடற்கூற்று பரிசோதனையின்போது அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here