அக்டோபர் 30 ஆம் திகதி புதன் கிழமையான இன்று உங்கள் ராசிக்கான பலன்கள்..!

0
89

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய துவக்கங்களை செய்யலாம். புது துணி எடுக்கலாம். இப்படி நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு காரியமும் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். பெருசாக எந்த பிரச்சனையும் இருக்காது. தீபாவளியை கொண்டாட முழு மூச்சோடு தயாராகிக் கொண்டிருப்பீர்கள் வாழ்த்துக்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பிரச்சனைகள் வந்து ஒட்டிக்கொள்ளும். இன்னைக்கு தான் விடுமுறை நாள், சில பல நல்ல வேலைகளை செய்யலாம் என்று யோசித்து வைத்திருப்பீர்கள். ஆனால் சரியாக சொல்லி வைத்தது போல, பிரச்சினைகள் துவங்கும். கொஞ்சம் சோர்வடைய தான் செய்யும். கவலைப்படாதீங்க. பிரச்சனைகளை கடந்து செல்லுங்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கும் பண்டிகையை கொண்டாட சந்தோஷமாக தயாராகலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். வேலையிலும் தொழிலிலும் எதிர்பார்த்ததை விட சுறுசுறுப்பு இருக்கும். பிரயாணம் எல்லாம் சௌகரியமாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்தித்து சந்தோசமும் அடைவீர்கள். நிதி நிலைமை சீராகும். வீட்டில் இருந்த சண்டை சச்சரவுகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிடும் பிள்ளைகளுடைய மனது சந்தோஷம் அடையும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். எல்லா விஷயத்திலும் உஷாரா இருப்பீங்க. சில விஷயங்களில் ஏமாந்து போகவும் வாய்ப்புகள் இருக்கிறது. இழந்த விஷயங்களை அனுபவமாக எடுத்துக் கொள்ளுங்கள். விருந்தாளிகளோடு பழகும் போது கூடுதல் கவனம் தேவை. அனாவசியமான வார்த்தைகளை பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். சில பேருக்கு இன்னைக்கு தான் போனஸ் வரும். நிதி நிலைமை ஓரளவுக்கு சீராகும். மனது தெம்பு அடையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி கொடுத்து விடுவீர்கள். உற்சாகமாக தீபாவளியை வரவேற்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைபாடுகள் நீங்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அதிக ஆர்வம் இருக்கும். பெரியவர்களாக இருந்தால் விடுமுறைக்கு பிள்ளைகள் வீட்டிற்கு எப்போது வரப் போகிறார்கள் என்று யோசிப்பீர்கள். சிறு பிள்ளைகளாக இருந்தால் எப்போது புத்தாடை, பட்டாசு வரும் என்று யோசிப்பீர்கள். இப்படி புதுப்புது விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் இன்று நடக்கும். இறை ஆசிர்வாதம் கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலையில் சில பேருக்கு பிரச்சனை வரலாம். வியாபாரத்திலும் சின்ன சின்ன தடைகள் வரலாம். எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத சிக்கல்கள் வரும். நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். அதற்காக உடனே டென்ஷன் ஆக கூடாது. கோபப்படக்கூடாது. அடுத்தவர்களையும் போட்டு குழப்பி விடக்கூடாது. நிதானமாக நின்று யோசித்தால் பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வை பெறலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பிரச்சனைகள் வரும். தீபாவளி பர்சேஸ் என்று சொல்லி கடைக்காரரிடம் சென்று சண்டை போடாதீங்க. அதிகம் பேரம் பேசி வாக்குவாதம் செய்யாதீங்க. வாயை அடக்கி வைத்தால் இன்று பிரச்சனை கிடையாது. மேலதிகாரிகளிடம் கட்டாயம் லீவு கேட்டு சண்டை போடாதீங்க. முக்கியமான வேலை ஏதாவது இருந்தால் அதை முடிக்க பாருங்க.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிந்தனைகள் வரும். கையில் பணம் இல்லை, அடுத்த செலவுக்கு என்ன செய்வது என்று சில பேர் சிந்திக்கலாம். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஒரு சில பேருக்கு வரலாம். எதுவாக இருந்தாலும் மனதை திடப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். பண்டிகை நாள் வருடத்திற்கு ஒருமுறைதான் வரும். ஆகவே சந்தோஷம் ரொம்ப ரொம்ப முக்கியம் அதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மேன்மை நிறைந்த நாளாக இருக்கும். பெரிதாக எந்த டென்ஷனும் இருக்காது. நீங்க போட்ட பிளான் எல்லாம் நல்லபடியாக நடந்து முடியும். பிரிந்த உறவுகளை சந்திப்பீர்கள். மனது சந்தோஷம் அடையும். தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவ்வளவுதான் உங்கள் பிள்ளைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். அலட்சியம் இருக்கக்கூடாது.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று ஓய்வு எடுத்துக் கொள்வீர்கள். பெருசாக வேலையில் டென்ஷன் பரபரப்பு எல்லாம் இருக்காது. பண்டிகையை கொண்டாட தயாராகலாம். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். தொழிலில் லாபம் கிடைக்கும். உறவினர்களின் மூலம் மனது சந்தோஷம் அடையும். பிரிந்த கணவன் மனைவி உறவு ஒன்று சேரும். கொஞ்சம் நிதி நிலைமை பற்றாக்குறை இருக்கத்தான் செய்யும். ஆனால் பிரச்சனை பெருசாக இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here