அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு – சற்றுமுன் வெளியான செய்தி..!

0
156

வைத்தியர் அர்ச்சுனாவை கைது செய்யுமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.

மன்னார் வைத்தியசாலைக்குள் புகுந்து ரௌடித்தனத்தில் ஈடுபட்ட அர்ச்சுனா மன்னார் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று (30) விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வைத்தியர் அர்ச்சுனா மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை.

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு மனஅழுத்தம், தேர்தல் பரப்புரையில் தீவிரமாக உள்ளார் என அவரது சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தனர்.

வைத்தியர் அர்ச்சுனா தேர்தல் பரப்புரையில் தீவிரமாக இருப்பதாக சொல்லப்பட்டாலும், அவரது புதிய காதல் ஒலிப்பதிவுகள் என குறிப்பிட்டு, சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், வைத்தியர் அர்ச்சுனாவும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவதை சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர். இன்று காலையில் சமூக ஊடகத்தில் பதிவிட்டதையும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதையடுத்து அர்ச்சுனாவை கைது செய்து முற்படுத்த மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து, அர்ச்சுனா தனது பேஸ்புக் பக்கத்தை முடக்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here