மது விருந்தில் தகராறு – ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்..!

0
18

ஹித்தோகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அத்துருவெல்ல பிரதேசத்தில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளதாக ஹித்தோகம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்டவர் ஹித்தோகம, அத்துருவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடையவர் ஆவார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…

கொலை செய்யப்பட்டவர் கடந்த 27 ஆம் திகதி அன்று நான்கு நபர்களுடன் இணைந்து மது அருந்திக்கொண்டிருந்துள்ள நிலையில் கொலை செய்யப்பட்டவருக்கும் மற்றுமொரு நபருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேக நபர் கொலை செய்யப்பட்டவரின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 33 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹித்தோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here