சற்றுமுன் பதுளையில் தனியார் பஸ் விபத்து.. 3 பேர் உயிரிழப்பு.!

0
235

சற்றுமுன் பதுளை, துன்ஹிந்த வீதியில் 04 ஆவது கிலோ மீற்றர் தூண் பகுதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 03 பேர் உயிரிழந்தனர்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் போது பேருந்தில் சுற்றுலா சென்ற மாணவர்கள் உட்பட 41 பேர் பயணித்துள்ளனர். மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் 35 பேர் காயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here