அறுகம்பே விவகாரம் – பின்னணியில் செயற்பட்ட கும்பல் தொடர்பில் வெளியான தகவல்.!

0
15

அறுகம்பே பிரதேசத்தில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இது தீவிரவாத குழுவினால் திட்டமிடப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க பிரதிநிதிகள் அமெரிக்க பிரதிநிதிகளிடம் இதனை தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா மற்றும் ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தலைவர்களை சந்தித்து இது குறித்து கலந்துரையாடினர்.

இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேர் உட்பட தலைவர்கள் மற்றும் குழுவை வழிநடத்திய ஈரான் பிரஜை உள்ளிட்ட தலைவர்கள் இந்த வலையமைப்பு தீவிரவாத வலையமைப்புடன் இணைக்கப்படவில்லை என பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான பிரதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவாக செயற்பட்ட ஒரு கும்பலின் முயற்சியே என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விவாதத்தில் கலந்து கொண்ட இலங்கைப் பிரதிநிதிகள் அமெரிக்கப் பிரதிநிதிகளிடம், தீவிரவாதக் கருத்துக்காக இப்படியொரு குழு எப்படி தம்மைக் கொல்ல முடியும் என்று கேட்டனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் பயண ஆலோசனை ஏன் விதிக்கப்பட்டது என்றும் அமெரிக்க பிரதிநிதிகளிடம் இலங்கை பிரதிநிதிகள் வினவியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாரிய சம்பவங்கள் எதுவும் இடம்பெறாததால் பயண எச்சரிக்கையை நீக்கவேண்டும் என இலங்கை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here