யாழில் கணவன், மனைவி ப.டு.கொ.லை – 3 பேரிடம் தீவிர விசாரணை.!

0
89

யாழ்ப்பாணம் கற்கோவளம் பகுதியில் கணவன், மனைவியை படுகொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரில் இருவரை நேற்று முன்தினம் இரவும், ஒரு சந்தேக நபரை நேற்றையதினமும் வாக்குமூலம் பெறுவதற்காக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் 2025 ஆம் ஆண்டுக்கான சலவைத் தொழில் ஒப்பந்தத்தை இம்முறை பெற்றதனாலேயே குறித்த இரட்டை கொலை இடம் பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், கைதான மூன்று சந்தேக நபர்களும் இன்றையதினம் (01) பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

சந்தேக நபர்களை கைது செய்வதற்க்காக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரயந்த அமரசிங்க தலைமையிலான விசேட பிரிவுகளும், மாவட்ட குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சேந்தன் தலைமையிலான அணிகளும் தீவிரமாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here