பரிதாபமாக உயிரிழந்த 2 வயது குழந்தை – இறுதி அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்.! Video

0
93

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை, பியசேனபுர பகுதியில் 2 வருடங்கள் மற்றும் 6 மாதங்களேயான குழந்தையொன்று தண்ணீர் என நினைத்து அமிலம் (அசிட்) குடித்ததில் உயிரிழந்துள்ளது.

நேற்று (01) தெல்தோட்டை நகரிலுள்ள தங்க வியாபார நிலையமொன்றுக்கு தனது குழந்தையுடன் தந்தையொருவர் சென்றுள்ளார். அங்கு பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த அசிட்டையே குழந்தை அருந்தியதாக தெரியவந்ததையடுத்து குழந்தை தெல்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. எனினும் குழந்தை உயிரிழந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இன்றைய தினம் குறித்த குழந்தையின் இறுதி ஊர்வலம் இடம்பெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டதை காணக்கூடியதாக இருந்தது.

குழந்தையின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here