காதலியின் புகைப்படங்களை வைத்து மிரட்டிய காதலன் கைது.!

0
71

இரத்தினபுரி பகுதியில் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாகக்கூறி காதலியிடம் பணம் பறித்த காதலனை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரத்தினபுரியில் 11 மாதங்களுக்கு முன்னர் தற்செயலாக சந்தித்த நுவரெலியாவைச் சேர்ந்த 20 வயது இளைஞனே வேவெல்லத்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண்ணை ஏமாற்றியுள்ளதாக புகார் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்…

காதலரின் வேண்டுகோளுக்கு இணங்க படங்களை எடுத்து காதலனின் கைபேசிக்கு அனுப்பியதாகவும், காதலன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததால் தான் அவ்வாறு செய்ததாகவும் பொலிஸில் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், குறித்த இளைஞன் இரத்தினபுரிக்கு வந்து காதலியை பலமுறை சந்தித்ததாகவும், திருமணத்தின் பின்னர் நுவரெலியாவில் வீடொன்றை நிர்மாணிக்க விரும்புவதாகவும், அதற்கு 100,000 ரூபா தேவைப்படுவதாகவும் இளம்பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண் ஒரு இலட்சம் ரூபாவை காதலனுக்கு வழங்கியுள்ளார். சில நாட்களுக்கு பின்னர் மீண்டும் பணம் கேட்டு பெண்ணின் நிர்வாண படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், 20 வயது இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here