5 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது.!

0
44

போதைப்பொருளுடன் மலேசியாவைச் சேர்ந்த தாய்லாந்து பெண் ஒருவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (05) இரவு கைது செய்துள்ளனர்.

5 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த பெண் தனது பயணப் பொதியில் குறித்த போதைப்பொருளை மறைத்து வைத்து கொண்டு வந்திருந்ததாக இலங்கை சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here