ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட ஆளுமைகளுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும் என நம்பப்படுகினின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் எல்லாவற்றையும் சமாளித்து போகும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் இயல்பாகவே சற்று தையரியம் குறைந்தவர்களாக இருப்பார்கள். அப்படி எல்லாவற்றுக்கும் பயப்படும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் பொறுமையானவர்களாகவும் மன வலிமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் இலக்கை அடைய போராடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் புதிய முயற்சிகளில் இறங்குவதற்கு எப்போதும் தயக்கம் காட்டுவார்கள். இவர்கள் பயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாவிட்மாலும் தோல்வியை நினைத்து அடிக்கடி பயப்படுவார்கள்.
கடகம்
கடக ராசி பெண்கள் இயல்பாகவே கருணை உள்ளம் கொண்வர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களை விடவும் மற்றவர்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் உறவுகள் மீது கொண்டுள்ள அதிக ஈடுப்பாடு மற்றும் அன்பு இவர்களை எப்போதும் ஒரு பய உணர்வுடனேயே வைத்திருக்கின்றது. இவர்கள் காதல், திருமண வாழ்க்கை மற்றும் தொழில் விடயங்களிலும் கூட எப்போதும் அச்சத்துடன் தான் இருப்பார்கள். அவர்களின் இந்த குணம் இவர்களை அதிக அக்கறையுடன் செயல்பட வைக்கின்றது.
துலாம்
துலாம் ராசியில் பிறந்த பெண்கள் உறவுகளிடைய நல்லிணக்கத்தை அதிகம் விரும்புகின்றார்கள். இவர்களுக்கு சண்டை மற்றும் கருத்து முறன்பாடுகளின் மீது இனம் புரியாத பயம் இருக்கும். இதனால் சில சந்தர்ப்பங்களில் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தவும் கூட பயப்படுவார்கள். மற்றவர்கள் நலன் பாதிக்கப்படும் என்பதற்காக பல விடயங்களை சகித்துக்கொண்டு வாழும் குணம் கொண்ட இவர்களுக்கு எப்போதும் ஒருவித பயம் இருந்துக்கொண்டே இருக்கும்.