நீரில் இழுத்துச் செல்லப்பட்ட வாகனம் – இருவர் உயிரிழப்பு.!

0
79

கொழும்பின் புறநகர் பகுதியில் கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எஸ்வத்த – மானகட வீதியின் ரம்புகே வத்த கிளை வீதியில் தும்மோதர ஆற்றைக் கடக்கச் சென்ற கெப் வாகனமொன்று நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்த விபத்து நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளதுடன், கெப் வாகனம் சுமார் 50 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், சம்பவத்தின் போது வண்டியில் சாரதி உட்பட நான்கு பேர் பயணித்துள்ளதோடு, அவர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் பலல்கொட்டுவ மற்றும் கிரிபத்கொட பிரதேசத்தை சேர்ந்த 27 மற்றும் 69 வயதுடையவர்களாவர்.

சடலங்கள் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here