நாளை ஜப்பானில் திருமணம் – நெப்போலியன் மகனுக்கு குவியும் வாழ்த்துகள்.!

0
69

நாளை ஜப்பானில் நடிகர் நெப்போலியன் மகன் திருமணம் நடைபெற உள்ள நிலையில், தமிழ் திரைப்பிரபலங்கள் பலர் ஜப்பான் சென்றுள்ளனர். இந்நிலையில் நடிகர் நெப்போலியன் மகன் தனுஷூம், அவரது வருங்கால மனைவி அக்‌ஷயாவும் நேரம் செலவழிக்கும் வீடியோ போட்டோஷூட் வெளியாகி வைரலாகி வருகிறது.

முன்னாள் எம்.பி.யும் தமிழ் திரைப்பட நடிகருமான நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் – அக்‌ஷயா திருமணம் நாளை ஜப்பானில் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்திற்காக ஒரு மாத கப்பல் பயணத்தை மேற்கொண்டிருந்தனர் நெப்போலியன் குடும்பத்தினர். ஜப்பானைச் சென்றடைந்துள்ள நெப்போலியன் குடும்பத்தினர் திருமணத்திற்கான வேலைகளை ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் திரையுலகில் இருந்து நெப்போலியன் மகன் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நடிகர்கள் சரத்குமார், ராதிகா, மீனா, கலா மாஸ்டர், குஷ்பு என திரையுலகப் பிரபலங்கள் பலரும் ஜப்பான் சென்றிருப்பதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here