சுங்க திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகளுக்கு கடூழிய சிறை.!

0
33

கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கு தலா 35 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்துள்ளது.

தண்டனைக்கு மேலதிகமாக, பிரதிவாதிகள் ஒவ்வொருவருக்கும் தலா 125 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு விநியோகிப்பதற்காக இறக்குமதி செய்யப்பட்ட பேருந்து உதிரிப் பாகங்களை வழங்குவதற்காக பஞ்சிகாவத்தையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் 125 மில்லியன் ரூபாய் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here