பிரபல யூடியூபரான 17 வயது யுவதிக்கு நேர்ந்த பரிதாபம்.!

0
67

இந்தியா – கேரள மாநிலம் காசர்கோடு என்மகஜே கிராம பஞ்சாயத்தில் துவைத்த துணிகளை மொட்டை மாடியில் பாரபெட்டில் தொங்கவிட்ட நிலையில் மின்சாரம் தாக்கி 17 வயதே ஆன பிரபல யூ டியூபர் பரிதாபமாக உயிரிழந்தார். ஈரமான உடைகள் கட்டிடத்தின் அருகில் இயங்கும் மின் கேபிள்களைத் துணிகள் தொட்டதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

இடையடுக்கைப் பகுதியில் வசித்து வருபவர் இஸ்மாயில். இவரது மனைவி ஹவ்வம்மா. இந்த தம்பதியரின் மகள் பாத்திமா இஷானா எனும் பிரபல யூடிபர் பரிதாபமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

தாய் கண் எதிரே மகள் மின்சாரத்தால் தாக்குண்டது கண்டதும் ஹவ்வம்மாவும் தனது மகளைக் காப்பாற்ற முயன்றபோது மின்சாரம் அவரையும் தாக்கியதில் சுயநினைவை இழந்தார். அதன் பின்னர் ஹவ்வம்மா செங்கலத்தில் உள்ள ஈ.கே.நாயனார் கூட்டுறவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பஞ்சாயத்து உறுப்பினர் ரம்லா கூறுகையில், “சுமார் 30 வருடங்களாக இந்த குடும்பத்தினர் அந்த பகுதியில் லீஸுக்கு இருந்து வந்தனர். கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு தான் இந்த புதிய வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தனர். என் கண்ணெதிரே தான் அந்தப் பெண் வளர்ந்தாள். என் மகள் அவளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தாள். துறுதுறுவென சூட்டிகையான பெண் இப்படி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறாள்” என்று ரம்லா கூறினார்.

இஷானா 11ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில், தன்னுடைய படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, யூடியூப்பில் தொடர்ந்து வேடிக்கையான குறும்படங்களை வெளியிட்டு வந்தார்.

இஷானாவின் புதிய வாடகை வீட்டிற்கு பஞ்சாயத்தில் இருந்து கட்டிட அனுமதி இல்லை என்று ரம்லா கூறினார். இரண்டாவது தளம் சமீபத்தில் சேர்க்கப்பட்டது, இந்த கட்டமைப்பு மின்வயர்களுக்கு அருகே வரை சென்றுள்ளது.

மின்கம்பிகளை தனது கட்டிடத்தின் அருகில் இருந்து மாற்றுவதற்கு வீட்டு உரிமையாளர் மின்சாரத்துறையினரைத் தொடர்பு கொள்ளவில்லை என குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். இஷானாவின் பெற்றோர் சாலையோர உணவகம் ஒன்றை நடத்தி வந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here