ஜப்பானில் சிறப்பான முறையில் நடந்த நெப்போலியன் மகன் திருமணம்..!

0
29

முன்னாள் தமிழக எம்.பி.,யும், தொழிலதிபரும், நடிகருமான நெப்போலியன் மகன் தனுஷ் திருமணம் இன்று காலை ஜப்பானில் சிறப்பாக நடந்து முடிந்தது.

தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தனுஷூக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலியை சேர்ந்த அக்‌ஷயா எனும் உறவினர் மகளுடன் திருமண நிச்சயதார்த்தம் வீடியோ கால் மூலம் நடந்து முடிந்தது.

அதன் பின்னர் ஜப்பானில் திருமணம் நடத்த முடிவு செய்த நிலையில், இந்த திருமணத்திற்காக ஒரு மாத காலம் குடும்பத்தினருடன் மகனையும் அழைத்துக் கொண்டு கப்பலில் அமெரிக்காவில் இருந்து ஜப்பான் பயணித்தார் நெப்போலியன்.

இந்நிலையில் தனுஷ் -அக்‌ஷயா திருமணம் இன்று காலை 8 மணியளவில் ஜப்பானில் உறவினர்கள், நெருங்கிய திரையுலக நண்பர்கள் சூழ இனிதே நடந்து முடிந்தது. தமிழ் திரையுலகில் இருந்து பிரபலங்கள் குஷ்பு, ராதிகா, மீனா, சரத்குமார், பாண்டியராஜன், கலா மாஸ்டர் எனப் பலர் இந்தத் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

ஆட்டம், பாட்டம் என களைக்கட்டிய தனுஷ்- அக்‌ஷயா ஜோடியின் திருமண புகைப்படங்கள் வெளியான நிலையில் சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here