ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி; 8 பெண்கள் கைது.!

0
79

ஜா – எல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தடுகம பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து 08 பெண்களும் மசாஜ் நிலையத்தின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜா – எல பொலிஸார் தெரிவித்தனர்.

ஜா – எல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

20 முதல் 26 வயதுக்குட்பட்ட 8 பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களில் சிலர் தொழில் வாய்ப்புத் தேடி தங்களது கிராமங்களிலிருந்து கொழும்பு பிரதேசத்திற்கு வந்தவர்கள் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா – எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here