முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள தொலைபேசி திருத்தும் கடை ஒன்றில் யுவதி ஒருவர் தனது தொலைபேசியினை திருத்துவதற்காக கொடுத்துள்ளார்.
தொலைபேசியினை திருத்தி பெற்றும் சென்றுள்ளார்கள் இந்த நிலையில் இவ்வாறு கொடுக்கப்பட்ட தொலைபேசியில் இருந்த படங்கள் குறிப்பாக யுவதியின் முக்கிய படங்கள் திருடப்பட்டு இன்னெரு இளைஞனின் கைக்கு மாறியுள்ளது.
குறித்த இளைஞன் குறித்த யுவதியினை தொடர்பு கொண்டு அவரின் அந்த அந்தரங்க படங்களை அனுப்பி மறைமுகமாக பாலியல் அச்சுறுத்தல் விடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினால் 20.10.2024 இன்று முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் யுவதியின் தொலைபேசியில் இருந்து காணொணி காட்சிகளை திருடி மறைமுக அச்சுறுத்தல் விடுத்த சந்தேகத்தில் குறித்த தொலைபேசி திருத்தல் நிலையத்தின் உரிமையாளர் உள்ளிட்ட அங்கு பணியாற்றி 5 பேர் கைது செய்யப்பட்டு 21.10.2024 அன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அனைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணை கடந்த 07.11.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது மீண்டும் குறித்த 5பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.