நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பதுளை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சமந்த வித்யாரத்னா அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட இருவரும், புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட ஒருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பதுள்ளையிலிருந்து 10 வது பாராளுமன்றத்திக்கு தெரிவாகி இருக்கும் வேட்பாளர் பட்டியலில் 2 வது இடத்தை பிடித்துள்ள கிட்ணன் செல்வராஜ் அவர்களுக்கும், அம்பிகா சாமுவேல் அவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்…
தேசிய மக்கள் சக்தி (NPP) – 6 ஆசனங்கள்
1. சமந்த வித்யாரத்னா – 208,247
2. கிட்ணன் செல்வராஜ் – 60,041
3. அம்பிகா சாமுவேல் – 58,201
4. ரவீந்திர பண்டார – 50,822
5. சுதத் பலகல்ல – 47,980
6. டினிந்து சமன் – 45,902
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 2 ஆசனங்கள்
1. நயன வாசலதிலகே – 35,518
2. சமிந்த விஜேசிறி – 29,791
புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 1 ஆசனம்
1. சாமர சம்பத் தசநாயக்க – 19,359