நாடாளுமன்றத்திற்கு முதல் தடவையாக மலையக தமிழ் பெண்கள் மூவர் தெரிவு.!

0
69

மலையக அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக மலையக சமூகத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரான கலைச்செல்வி 33,346 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ள அதேவேளை, பதுளை மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அம்பிகா சாமுவேல் 58,201 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அத்துடன், மாத்தறை மாவட்டத்தில் சரோஜா சாவித்திரி போல்ராஜ் 148,379 விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளனர். 1977 ஆம் ஆண்டு முதலாவது மலையக பிரதிநிதித்துவத்தைப் பெற்ற மலையக சமூகம் கடந்த 47 வருடங்களில் பெற்ற முதலாவது பெண் பிரதிநிதித்துவம் இது என்பது முக்கிய விடயமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here