சிறிபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலுகான – மஹியங்கன வீதியில் பதனாகல பிரதேசத்தில் கெப் வண்டியொன்று காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் கார் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து நேற்று சனிக்கிழமை (16) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் உத்தலபுர, தமனேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் ஆவார்.
சிறிபுரவிலிருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த கெப் வண்டியொன்று எதிரே வந்த காருடன் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் சாரதிகள் இருவரும் படுகாயமடைந்து தெஹிஅத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கார் சாரதி உயிரிழந்தார். சடலம் தெஹிஅத்தகண்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.